Sunday, September 17, 2017

செப்டம்பர் 1 7 இட ஒதுக்கீடு தியாகிகள் தின பாடல் --- வழக்கமான பாடல் முறையில் இல்லாமல் தொக்கையறாவை பாடல் முழுவதும் தவழ விடும் முயற்சித்துள்ளேன்

           தொகையறா

துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே

            பல்லவி
இது மஞ்சள் பூக்கள் செங்குருதியில் குளித்த நாள்
எம் குலசாமிகள் குடல் மண்ணில் விழுந்து சரிந்த நாள்
வன்னியர் பெருவீரத்தை உலகம் மீண்டும் உணர்ந்த நாள்
எதிர்காலத்துக்காக தீபந்தமான தலைவர்கள் நாள் .
சரித்திரமானது ஒரு போராட்டம்
சாதித்து காட்டியது ஒரு போர் கூட்டம்

உம்மாலே உய்வடைந்தோம் –இருந்தும்
ஏனோ உம்மை மறந்தோம் –இனி
உங்கள் நினைவோடு தியாக நெருப்போடு
வன்னியனாக மீண்டு எழுவோம் .............................

           சரணம் -1
எத்தனை எத்தனை அடிகள் விழுந்ததோ  
எத்தனை எத்தனை தடிகள் உடைந்ததோ
போராடு போராடு நரம்புகள் புடைத்ததோ
நசுக்க நினைததோருக்கு அச்சப்பேய் பிடித்ததோ
உன் மண்டையோடு உடைந்ததே –இந்த
மந்தைகள் மனிதர்கள் ஆவதற்கு
குருத்து எலும்புகள் நொறுங்கியதே –இந்த
இனத்தின் கூன் நேர் ஆவதற்கு .
இட ஒதுக்கீடு போராடி பெற்றதல்ல போர் வென்று பெற்றது
விழுப்புண் சுமந்தோரால்  வீர மரணம் அடைந்தோரால் நிகழ்ந்தது
துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே
உம்மாலே உய்வடைந்தோம் –இருந்தும்
ஏனோ உம்மை மறந்தோம் –இனி
உங்கள் நினைவோடு தியாக நெருப்போடு
வன்னியனாக மீண்டு எழுவோம் .............................

               சரணம்-2
எத்தனை குமுறல்கள் பூகம்பமாக வெடித்தது
எத்தனை கோபங்கள் எரிதனலாக கொதித்தது
தொடர் சாலை மறியலில் தமிழகம் துவண்டது
ஒவ்வொரு மனதிலும் புது  நம்பிக்கை பிறந்தது
தலைஎழுத்தை மாற்ற ஒரு அரசாணை-நாம்
இழந்த அரசாளும் உரிமையை நினைவுறுத்தியது
தலைபோன போதும் தளர்ந்திடவோமா –தன்னை
துளைத்த குண்டை இதயம் பயமுறுத்தியது ...
இடஒதுக்கீடு அரசாணை அல்ல உங்கள் உயிர் ஓசை
அதை உணர்தோமே சிந்தை தெளிந்தோமே உம்மை மறவோமே
துப்பாக்கி தோட்டாவை துச்சமென மதித்தோரே
அதிகார ஆணவத்தை எச்சமென மிதித்தோரே
மதம் கொண்ட யானைகளை மரம் கொண்டு தடுத்தோரே
மடைப்போன்ற படைக்கெதிராய் நெருப்பென்று நின்றோரே
உம்மாலே உய்வடைந்தோம் –
எம்முள்ளும் உம்மை உணர்ந்தோம்  –இனி
உங்கள் நினைவோடு தியாக நெருப்போடு
வன்னியனாக மீண்டு எழுவோம் .............................
இது மஞ்சள் பூக்கள் செங்குருதியில் குளித்த நாள்
எம் குலசாமிகள் குடல் மண்ணில் விழுந்து சரிந்த நாள்
வன்னியர் பெருவீரத்தை உலகம் மீண்டும் உணர்ந்த நாள்
எதிர்காலத்துக்காக தீபந்தமான தலைவர்கள் நாள் .
தலைவர்கள் நாள் தலைவர்களால் தலைவரானவர் நாள்
தலைவர்கள் நாள்  தியாக தலைவர்கள் நாள்
எங்கள் தெய்வங்களை தலை வணங்கிடும் நாள்
மீண்டும் கிளர்ந்தெழவே இது புத்துணர்ச்சி நாள்
இன்று நம்மை நாம் உணர்ந்தால் நாளை மறுமலர்ச்சி நாள்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete